சென்னை டெம்பிள் சீரியஸ் – பகுதி 12 நடேசன் நகர் சாய்பாபா கோவில் – பாபா தானே தேர்ந்தெடுத்த புனித ஸ்தலம்
சென்னை டெம்பிள் சீரியஸ் – பகுதி 12 நடேசன் நகர் சாய்பாபா கோவில் – பாபா தானே தேர்ந்தெடுத்த புனித ஸ்தலம் சென்னை கோவில்களின் தொடரில் பன்னிரண்டாவது புண்ணிய ஸ்தலமாக நாம் பார்க்கப் போகும் கோவில் — சென்னை விருகம்பாக்கம் அருகே உள்ள நடேசன் நகரில் அமைந்துள்ள சாய்பாபா கோவில். இந்த கோவிலின் உருவாக்க வரலாறு ஒரு அற்புதமான கதையாகும். பாபா தானே வந்திருந்து ஆசீர்வதித்த இடம் என்று பக்தர்கள் அனுபவத்துடன் கூறுகின்றனர். சாய்பாபாவின் அற்புதம் – ஒரு மணி நேரத்தில் கோவில்! இக்கோவிலில் தற்போது இருக்கும் சிலை உண்மையில் நாச்சியார் புறம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு கொண்டிருந்த கோவிலுக்காகத் தயாரிக்கப்பட்டது. அந்த சிலையை ஒரு நாள் இங்கு வைத்து, மறுநாள் எடுத்துச் செல்லலாம் என்று கோவில் நிர்வாகம் திட்டமிட்டது. அந்த நேரத்தில் இது வெறும் ஒரு கார் சேட் (Car Shed) மட்டுமே இருந்தது. ஆனால் என்ன நடந்தது? அந்த அதிகாலை 5 மணிக்கு சிலையை வைத்து, நிர்வாகிகள் வீட்டுக்கு சென்று refresh ஆகி விட்டு ஒரு மணி நேரத்தில் திரும்பி வந்தபோது, அவர்களுக்கு கிடைத்த அதிர்ச்சி — அந்த கார் செட் பகுதி வெறும் 1 மணி நேரத்தில்...