63 நாயன்மார்கள் வரலாறு -3 இயற்பகை நாயனார் / 63 nayanmars History - iyarpagai nayanar
63 நாயன்மார்கள் வரிசையில் அடுத்ததாக நாம் பார்க்கப்போவது இயற்பகை நாயனார். தானதர்மம் என்றாலே நம் நினைவில் முதலில் வருவது கர்ணன். ஏனென்றால் கர்ணனை மிஞ்சிய ஒரு தானம் செய்பவர் இதுவரை பிறக்கவே இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. அதேபோல் இந்த இயற்பகை நாயனாரும் தன்னிடம் சிவனடியார்கள் வந்து எதைக் கேட்டாலும் கொடுத்து வடும் உள்ளம் படைத்தவர். காவிரி பூம்பட்டினத்தில் வாழ்ந்து வந்த இயற்பெயர் நாயனார் ஒரு வியாபாரி. இயற்கையிலேயே இவர் பெரும் செல்வந்தராக இருந்தார். தன்னைத் தேடி வரும் சிவனடியார்கள் எதை கேட்டாலும் கொடுத்துவிடும் மனப்பக்குவம் பெற்று இருந்தார் அதை ஒரு சேவையாகவும் செய்து வந்தார். இப்படி வரும் சிவனடியார்கள் உணவு, உடை, பொருள், பணம், தங்கம், வீடு என்று பல்வேறு வகையான தானங்களை கேட்க சிறிதும் கலங்காமல் சிரித்த முகத்துடன் சிவனடியார்களுக்கு செய்வது சிவனுக்கே செய்வது என்று நினைத்து கலங்காமல் அனைத்தையும் கொடுத்துக் கொண்டே இருந்தார்.