63 நாயன்மார்கள் வரலாறு - 4 இளையான்குடி மாற நாயனார் 63 Nayanmars History Ilayangudi maara Nayanar /


63 நாயன்மார்கள் வாழ்க்கை வரலாற்றில் இந்த பதிவில் இளையான்குடி மாற நாயனார் வரலாறை பார்ப்போம்.

 மானிடராய் பிறந்த ஒவ்வொருவரும் தவறாமல் செய்ய வேண்டிய ஒரு தானம் அன்னதானம் ஆகும். வேறு எந்த வகையான தெய்வச் செயலில் நாம் ஈடுபட்டாலும் அது இந்த அன்னதானத்திற்கு ஈடு இனையற்றது என்பது இறைவனே ஒப்புக்கொண்ட ஒரு உண்மை.



பசித்தோருக்கு உணவளிப்பதைப் போல் உயர்ந்த தொண்டு வேறொன்றில்லை. அன்னதானம் என்பது ஏழைகளுக்கும் பசிப்பேறடையும் எல்லோருக்கும் நேர்த்தியான உணவை அளிக்கும் புனித செயலாகும். இது நம் பணத்தால் மட்டுமல்ல; மனமுள்ள ஒருவரும் அன்னதானியைப் போல் விளங்கலாம்.

🍚 அன்னதானம் செய்வதால் ஏற்படும் நன்மைகள்:

பசியால் தவிக்கும் ஒருவரைத் தங்க வரம் அளிப்பது போன்ற புண்ணியம் கிட்டும்.

பசிக்காலத்தில் உணவு அளிப்பது, உயிரைப் பாதுகாப்பதற்குச் சமம்.

சந்‌தோஷமான முகங்களைப் பார்க்கும் அந்த கணமே இறைவனைப் பார்ப்பதற்கே சமம்.

நம்முடைய பாவங்கள் போகும், நல்ல கன்மங்கள் தேடிக்கொண்டு வரும்.


🌼 இறைவனின் அருள் எப்படி கிட்டும்?

அன்னதானம் செய்வது, நரசிம்மர், ருத்ரர், விஷ்ணு, பார்வதி, சிவன் போன்ற எல்லா தெய்வங்களையும் ஒருசேர வழிபடுவது போலவே ஆகும். அந்த பசிப்போக்குவோம் என்ற மனநிலைதான் இறைவனுக்கு மிகவும் பிடித்தது. பசியுள்ளவனைப் பார்த்தும் உதவாமல் இருப்பது நமக்கே தாழ்வு.

திருமந்திரம் கூறுகிறது:

 "பசியை ஓட்டுவது பாவம் போக்கும்,
அன்னம் அளிப்பது ஆனந்தம் தரும்."

அன்னதானம் என்பது மனிதநேயம் தழைக்கும் தூய வழி. இது தருமத்தின் முதன்மையான ரூபம். கடைசி மூச்சுவரை யாருக்காவது ஒரு பிடி சாதம்  கொடுக்க முடிந்தால், அது நம் வாழ்க்கையின் வெற்றி. அன்னம் அளித்துப் பாருங்கள், அருள் பொழியும்!

என்னடா இவன் இளையான்குடி மாற நாயனார் வரலாற்றை பற்றி பேசுகிறேன் என்று கூறிவிட்டு அன்னதானத்தை பற்றி பேசுகிறானே என்று பார்க்கிறீர்களா... !

பிறரின் பசியை போக்கியே இறைவனிடத்தில் சேர்ந்த அற்புதமான மகான் தான் இளையான்குடி மாற நாயனார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இளையான்குடி என்னும் கிராமத்தில் பிறந்தவர் தான் மாறன் என்பவர். பிற்காலத்திலே இவர் இளையான்குடி மாற நாயனார் என்று போற்றப்பட்டார்.

பசி என்று எவர் வந்தாலும் அவரது பசிப்பிணியை நோக்கி அவருக்கு வயிறார சாப்பாடு போட்டு அவர் முகத்தில் வரும் சந்தோஷத்தை தான் சந்தோஷமாக எண்ணி வாழ்ந்து வந்தார் இளயான்குடி மாற நாயனார்.

இளையான்குடி மாற நாயனார் ஒரு சிறந்த சிவபக்தர். அவரது சிவ சிந்தனை எப்படி என்றால் பசியோடு வருபவர்க்கு வயிறார அன்னம் அளிப்பதே சிவனை வணங்கியதாக அர்த்தம் என்று அவர் நம்பினார்.

பசியோடு யார் வந்தாலும் அவர் எந்த குலத்தவராக இருந்தாலும், அவர் ஆணாக இருந்தாலும், அல்லது பெண்ணாக இருந்தாலும் அவர்களை சிவனடியார்கள் என்று இளையான்குடி மாறன் நினைத்து அவர்களை வணங்கி வரவேற்பார். பின்பு தமது வீட்டுக்கு அன்புடன் அழைத்து வருவார். அவர்களது பாதங்களை தண்ணீர் விட்டு கழுவி சுத்தப்படுத்துவார். அவர்களை பிறகு ஆசனத்தில் அமர செய்வார். அவர்களிடம் குடிகொண்டுள்ள ஆண்டவனை பூசிப்பார் பிறகு அவர்கள் விரும்புகின்ற வகையில் நான்கு வித உணவு வகைகளை அறுசுவையுடன் அமைத்து அவர்களுக்கு படைப்பார்.

இவ்வாறு தன் வாழ்நாள் முழுவதும் இந்த சேவையை சிறப்பாக செய்து கொண்டு வந்தார் மாற நாயனார்.. 

மாற நாயனாரின் ஒப்பற்ற பெருமையை உலக மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று இறைவன் திருவள்ளம் கொண்டார். நாயனாரின் செல்வம் குறைந்து போக செய்தார். அன்று முதல் நாயனாரின் செல்வம் நாளுக்கு நாள் குறைந்தது. அவர் வறுமையில் உழலத் தொடங்கினார். அப்பொழுதும் அவர் பசியுடன் வருபவர்களுக்கு சாப்பாடு போடும் பழக்கத்தை விடவில்லை. வீட்டில் உள்ள பொருட்களையும் நகைகளையும் விற்று அன்னதானம் செய்து வந்தார். தம்மையும் விற்க வேண்டிய அளவுக்கு கடன்களை வாங்கி செலவழித்தார்.

 இப்படியே காலங்கள் சென்று கொண்டிருந்தது. மாற நாயனார் தன்னுடைய சேவையையும் தொடர்ந்தார். சேவை பெருக, பெருக அவருக்கு கடனும் பெருகிக்கொண்டே வந்தது..

ஒரு நாள் ஆண்டவன் ஒரு நல்ல சிவனடியார் வேடத்தில் மாற நாயனார் வீட்டிற்கு வந்தார்.

அது ஒரு மழைக்காலம். இரவு வேலை வேறு. அன்றைய தினம் மாற நாயனாரே சாப்பிடாமல் பட்டினியாக இருந்தார். அவர் வெறும் வயிற்றுடன் படுக்க சென்ற பொழுது சிவனடியார் வேஷம் கொண்ட இறைவன் நாயனாரின் வீட்டு கதவை தட்டினார். "சாப்பாடு அளிப்பாயா" என கேட்டார்

இளையான்குடி மாறணநாயனார் செய்வதறியாது திகைத்தார். என்னடா இது நாமே சாப்பிடாமல் இருக்கிறோம் வீட்டிலும் ஒன்றுமில்லை இப்பொழுது சிவனடியார் வந்து உணவு கேட்கிறார் என்ன செய்வது என்று மிகப் பெரிய குழப்பத்திற்கு ஆளானார் மாற நாயனார்.

சிவனடியாரை ஒரு இருக்கையில் அமர வைத்து விட்டு "இதோ வந்து விடுகிறேன்" என்று சிவனடியாரிடம் கூறிவிட்டு  தன் மனைவியுடன் தனியாக ஆலோசனை செய்தார். 

அப்பொழுதுதான் அவருக்கு நினைவுக்கு வந்தது காலையில் விதை நெல்லை விதைத்து விட்டு வந்தது. அந்த இரவு வேளயில்
 விறு விறு என்று தனது விலை நிலத்திற்கு சென்று அங்கே விதைக்கப்பட்டிருந்த விதை நெல்லை ஒவ்வொன்றாக குனிந்து ஒரு, ஒரு நெல்லாக பொறுக்கி எடுத்து போதுமான அளவுக்கு வந்த பிறகு வேகமாக வீட்டிற்கு வந்து தன் மனைவியிடம் கொடுத்து அது மழைக்காலம் என்பதால் வெளியில் உள்ள விறகுகள் அனைத்தும்  நனைந்து இருப்பதால் வீட்டின் கூரையிலிருந்து மரங்களை உடைத்து அந்த வேலையில் அடுப்பை பற்றவைத்து பின்பு வீட்டின் பின்புறம் உள்ள கீரை செடிகளில் உள்ள கீரைகளை இருளில் தடவி, தடவி பறித்து உணவை தயார் செய்தனர் மாற நாயனார் மற்றும் அவரது மனைவி. 

ஒரு வழியாக அறுசுவை உணவு தயாராகி விட்டது. 
சிவனடியார் அமர்ந்திருந்த இடத்தை நோக்கி சென்று மாறனநாயனார் பார்க்க அங்கே சிவனடியார் இல்லை. 

இறைவன் ஜோதி வடிவமாக நின்று "அன்பனே அடியார்களுக்கு உணவு படைத்ததால் சிறப்பு பெற்ற நீயும் உன் மனைவியும் என்பால் வாருங்கள்" என்று கூறி அருளினார்.

இளையான்குடி மாற நாயனார் மற்றும் அவருக்கு ஏற்ற பத்தினியாக விளங்கிய அவரது மனைவியாரும் பேரின்ப வீடு அடைந்து நிலையான இன்பம் பெற்றார்கள்.

இந்த நாயன்மாரின் வாழ்க்கை நமக்கு என்ன கற்றுக் கொடுக்கிறது என்றால் நம்மிடம் இருந்தும் இல்லை என்ற சொல் வராமல் யார் எதை கேட்டாலும் பசி என்று வருபவர்களுக்கு உணவளிப்பதை வழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறது. 

அடுத்த பதிவில் வேறொரு நாயன்மாரை பற்றி பார்க்கலாம் சிவா விஷ்ணு டிவியுடன் இணையுங்கள் ஆன்மீகத்தை அனுபவியுங்கள்.


                                                          

                                                               Copyright © Shiva Vishnu TV. All rights reserved.

Comments

Popular posts from this blog

63 நாயன்மார்கள் வரலாறு – தில்லை வாழ் அந்தணர்கள் | 63 Nayanmars History – Thillai Vaazh Andhanargal

நமது பயணம் ஆரம்பம் — சிவா விஷ்ணு டிவியின் தரிசனத் திட்டங்கள்

63 நாயன்மார்கள் வரலாறு - 2 திருநீலகண்ட நாயனார் / 63 nayanmars History - thiruneelagandar nayanar